பிரதான செய்திகள்

யாழ் பல்கலை மேதினக்கூட்டம்

இன்று 01.05.2019 புதன்கிழமை காலை 10. மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்க பொது அறையில் இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுஆகியன இணைந்த யாழ்மாவட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் கூட்டமைப்பினால்  மேதினக்கூட்டம் நடாத்தப்பெற்றது.

இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டோரினால் கடந்த 21.04.2019 ஈஸ்ரர் ஞாயிறன்று நாட்டின் பலபகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களினால் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்ட அனைவரிற்கும் தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்த கூட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்க தீபன் திலீசன் அவர்களும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர் சங்க கலாராஜ் அவர்களும், புதிய அதிபர் சங்க நேதாஜி அவர்களும், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க விக்கினேஸ்வரன் அவர்களும் உரையாற்றினர்.

கூட்ட முடிவில் கலந்துகொண்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே கலந்துரையாடலும் இடம்பெற்றது. அத்துடன் எதிர்கால செயற்பாட்டிற்காக தொழிற்சங்கங்கள் இணைந்து செயற்படுவதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டமையினால் இணைந்த தொழிற்சங்க அமைப்பு ஒன்றினை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

dav

த.சிவரூபன்
இணைச்செயலாளர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
0777222600

Related posts

முஸ்லிம்களின் ஜனாஷா தொடர்பில் ஜனாபதிக்கு முன்னால் அமைச்சர் றிஷாட் கடிதம்

wpengine

எரிபொருள் நிலையங்களுக்கான நாளாந்த விநியோகம் சாத்தியமற்றது-அமைச்சர் காஞ்சன விஜேசேகர

wpengine

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மஹிந்தவுடன்,பசில், மைத்திரி

wpengine