பிரதான செய்திகள்

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி என்பது ரணிலோ அல்லது சஜித்தோ அல்ல

wpengine

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை பெரியபள்ளிவாசல் வழிநடத்த வேண்டும் -நவவி

wpengine

துப்பாக்கியால் ஆணுறுப்பை இழந்த திருடன்

wpengine