பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேட்கின்றோம் என்று கேட்கப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் எமது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தெரிவுக்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்றும் இதனால் பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலத்த பாதுகாப்புடன் ஞானசார தேரர் விஜயம்

wpengine

சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு ஆட்சியதிகாரத்தை பாதுகாத்தனர்: அனுரகுமார

wpengine

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

wpengine