பிரதான செய்திகள்

யாழ் பண்ணை சுற்றுவட்ட சிலை விவகார வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

மரணிக்கும் வரை எக்காரணம் கொண்டும் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரின் கட்சியை விட்டு விலகமாட்டேன்.

wpengine

ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

wpengine

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அ.இ.ம.கா

wpengine