Breaking
Sun. Nov 24th, 2024
யாழ், சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா-2016 நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி ம.குணபாலன் அவர்களது தலைமையில் நேற்று 30.11.2016 புதன்கிழமை பிற்பகல் 1.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. ந.காண்டீபன் (பிரதிக் கல்விப்பணிப்பாள் கல்வி அபிவிருத்தி, வலிகாமம் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. வ.ஜெயரூபன்(பழைய மாணவர், சிரேஸ்ட விரிவுரையாளர், தேசிய சமூக சேவைகள் திணைக்களம்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து பாடசாலை மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து விருந்தினர்களது உறைகள் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
பாடசாலைகளின் பௌதீக வளங்களைக் கூட்டுவதன் ஊடாக கல்விகற்கும் பிள்ளைகளின் மனத்திலே ஒரு நல்ல சுழலை உருவாக்க வேண்டும். பிள்ளைகள்மீது அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் எடுக்கின்ற முயற்சிகளுக்கும் மேலாக பெற்றோருடைய கடமையென்பது ஓர் மிகப்பெரிய கடமையாகும். unnamed-7
கடந்த வருடம் வட மாகாணம் கல்வியிலே ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. எங்கள் மாகாணத்தில் ஒரு காலத்தில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாக பார்க்கப்பட்டது. மிகப்பெரிய யுத்தத்திற்கு மத்தியில் மிகப்பெரிய அழிவுகளை சந்தித்தும் எங்கள் சமூகம் ஓரளவுக்கேனும் தலைநிமிர்ந்து வாழக்கூடிய அளவிற்கு இருக்கின்றதென்றால் அது கல்வியால் கிடைத்த செல்வம் தான். பலர் இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றாலும் அங்கெல்லாம் தங்கள் வாழ்க்கையை ஓரளவுக்கேனும் ஓட்டுவதற்கு கல்விதான் துணைநிற்கின்றது.

 அது மாத்திரமல்ல அவர்கள் இயன்றளவு முயற்சிகளை எடுத்து அந்த முயற்சிகள் மூலம் தாம் கல்வி பயின்ற பாடசாலைகளுக்கு உதவுகின்றனர். இதன்மூலம் இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவிசெய்ய முடியும். எங்களுடைய சமூகம் எல்லாத் துறைகளிலுமே மிக மிக பின்தங்கிய பின்னுக்கு தள்ளப்பட்ட ஒரு சமூகமாக மாற்றப்பட்டிருக்கின்றது. unnamed-4
இந்த சமூகம் மீண்டும் வளர்ச்சியைக் காணவேண்டுமென்றால் கல்வியிலே சிறந்த ஸ்தானத்தை அடைய வேண்டும். அதிபர் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் கைகளில் இருக்கின்றது. பலர் மிகவும் அர்ப்பணிப்போடும் அக்கறையுடனும் செயற்படுவதை எம்மால் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது.
அதேநேரத்தில் பெற்றோர்கள் கையிலும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. நல்ல குழந்தைகளாக வளர்ததெடுப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. பெற்றோர்கள் குழந்தைகளின் வளர்ச்சியிலே கவனம் எடுத்து வந்தால் எமது சமூகத்திற்கு அது ஒரு சிறந்த பணியாக இருக்கும். ஏனென்றால் இவர்களுடைய எதிர்காலம்தான் எங்களுடைய சமூகத்தினுடைய எதிர்காலமாக இருக்கின்றது.

ஒரு நல்ல எதிர்காலமாக எங்களுடைய சமூகத்திற்கு உருவாக வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புகளைச் செய்வதன்மூலம் எங்களுடைய சமூகத்தை மீண்டும் உயர்ச்சி நிலைக்கு கொண்டுசெல்ல முடியும். அதை நாங்கள் அனைவருமாக ஒற்றுமையாக செய்ய வேண்டும். அது தான் நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது பணி என்று நான் கருதுகின்றேன் என்றார்.

தொடர்ந்து பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்று நன்றியுரை மற்றும் பாடசாலை கீதம் என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.unnamed-5
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *