பிரதான செய்திகள்

யாழ் சின்னத்தில் தமிழ் காங்கிரஸ் வேட்புமனு

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதி தினம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் கடந்தவாரம் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தாக்கல் செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நேற்றையதினம் ஆறு சபைகளுக்கும் இன்று 10 சபைகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Related posts

Newzeland Prime minister opened a pannala Farm Training center

wpengine

வவுனியாவில் அரசாங்க வாகனங்கள் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

wpengine

முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு :அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine