Breaking
Mon. Nov 25th, 2024

பருத்தித்துறை கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட உதை பந்தாட்ட அணிகளுக்கிடையிலான இறுதி சுற்று போட்டி 8/9/2018  மாலை இடம்பெற்றிருந்தது.

விவசாய பிரதி அமைச்சரின் அனுசரணையில் வடமராட்சி உதய தாரகை கழகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில்,
பலாலி விண் மீன் ,மற்றும் குறிஞ்சி குமரன் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று,இன்றைய தினம் முதலிடத்தை பிடிப்பதற்காக பலப்பரீட்சையில் களம் கண்டிருந்தனர்.இதன் போது பலாலி விண்மீன் 2 -க்கு 1 என இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
முன்றாவது இடத்தினை றேன்ஜர்ஸ் .அணி வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினராக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். எமது கல்வி,விளையாட்டு,விவசாயம் என்பவற்றை நாம் மீள கட்டியமைக்க வேண்டும்.எமக்கே உரிய தனித்துவமானவை பாதுகாக்கப்பட வேண்டும் அவை விளையாட்டாக இருந்தாலும்,கலாச்சாரமாகவும் இருக்கலாம்.அடுத்த சந்ததியினரின் ஆரோக்கியத்தை நாம் முன்னின்று கொண்டு செல்வோம்.என பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *