பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் அவரை அவசரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனதால் அதிக குருதிப்போக்கால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும்,எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும்.

Maash

வவுனியா மாவட்ட மக்களுக்கான விஷேட அறிவித்தல்

wpengine

நீர் கட்டணம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் அமைச்சர் ஹக்கீம்

wpengine