செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். ஆளுநர் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதன்கிழமை (5) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதன் போது பணிப்பாளர், வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், புதிய கட்டிட தொகுதி ஒன்றை அமைக்கப்பட வேண்டும், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என எடுத்துக்கூறினார்.

வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நோயாளர்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கும், தேவையான மனிதவள ஆதாரங்களை முழுமையாக வழங்குவது அவசியமாகும். எனவே உரிய அதிகாரிகள் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என பணிப்பாளர் த சத்தியமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்று

wpengine

ஹஜ் கடமைக்காக எல்லையினை திறக்க உள்ள மன்னர் சல்மான்

wpengine

தமிழர் போராட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா அம்மான் சுமத்தும் குற்றச்சாட்டு

wpengine