யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (29.06.2023) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கௌரவ. சஜின் டி வாஸ் குணவர்தன அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் திரு. தஹாம் சிறிசேன அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், சர்வமத வழிபாடுகளிலும், சமூக நிகழ்வுகளிலும், பல்வேறுபட்ட சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.