செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சுற்றிவளைப்பின் போது 100 கிலோ 270 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குருநகர் தடாகத்தில் உள்ள மண்டைதீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100 கிலோ 270 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ். பிரேதேச குற்றத் தடுப்பு பிரிவினரால் இரு சநதேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றுக் காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடைய யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மேலும் கால தாமதமாகும்

wpengine

மன்னார்,முசலி,நானாட்டான் வாழ்வாதாரத்தில் பண மோசடிகள்! பயனாளிகள் விசனம்

wpengine

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி

wpengine