பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மஹிந்த

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் க்ஷ அவர்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது, அந்த பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

இலங்கை இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அதற்கு அனுசரணை வழங்கியது.

இந்த நிகழ்வில் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட இராணுவத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

Editor

கூட்டமைப்புக்கு எதிரான மஹிந்த! பதில் வழங்குவேன் இரா.சம்பந்தன்

wpengine

அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே எனக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

wpengine