பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில் வாழ்வெட்டு! தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக

யாழ்ப்பாண் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் அலுவலர் மீது நேற்று காலை தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடமிருந்து வாள்கள் இரண்டு, கைக்கோடரி ஒன்று, உந்துருளிகள் இரண்டு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டன.


இவர்கள் மல்லாகம் “கனி” குழுவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த அரச அலுவலர் வழமை போன்று நேற்று காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து உந்துருளிகளில் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வைத்து வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

Related posts

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

அல்-கொய்தாவின் நகர்வும், அமெரிக்காவினால் அல்-குர்ஆன் விநியோகமும், சோவியத்தின்வீழ்ச்சியும்.

wpengine

வெடித்து வெளியேறுகிறது ஆளுநர்கள் மீதான முதலமைச்சர்களின் அதிருப்தி

wpengine