பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில்ஹிருணிகா மீது மொட்டு கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து இறுதி நேரத்தில் அங்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.


முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலிசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.


குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர, உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பாரிய தோல்வியினை கண்ட ஐ.தே.க

wpengine

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! கத்தோலிக்க தேவாலயங்கள் கோரிக்கை! அது மட்டும் தான் தீர்வு

wpengine

கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதரவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் அமைச்சர் றிஷாட்

wpengine