பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.

இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்த வேண்டும்! பௌத்ததேரர் அரசை எச்சரித்தார்.

wpengine

பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும்- அமீர் அலி

wpengine

ராஜமெவுனம் களைந்த அதாவுல்லா மீண்டும் அம்பாரையில்

wpengine