பிரதான செய்திகள்

யாழ்,கிளிநொச்சி,வவுனியா சில இடங்களில் மின் தடை

யாழ். மற்றும் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மின்சாரத் தடையானது மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் யாழ். வீதி – மானிப்பாய், ஆறுகால் மடம், கூளாவடி, ஆனைக்கோட்டை VC, நவாலி, மூத்த விநாயகர் கோயிலடி, சென். பீற்றர்ஸ் தேவாலயப் பிரதேசம், அரசடி, அட்டகிரி, வேலக்கை, பள்ளத்தடி, குளப்பிட்டி, குளப்பிட்டி சாவற்காட்டுச் சந்தி, ஆனைக்கோட்டைச் சந்தி, வராகி அம்மன் கோவிலடி ஆகிய பகுதிகளிலும்,
காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை கிளிநொச்சியின் கரைகட்டுக் குளம், நாச்சிக்குடா, ஒலுமடு, சேனைப்புலவு, ஒதியமலை, பட்டிக் குடியிருப்பு, மருதோடை, கற்குளம், கோவில் புளியங்குளம், நெடுங்கேணி மொபிற்றல் கோபுரம், நெடுங்கேணி நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும்,
காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

wpengine

அதிகாலை நாடு திரும்பினார் பிரதமர் ரணில் !

wpengine