செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம், குடும்பஸ்தர் உயிரிழப்பு …!

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம், குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்..!

யாழில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் யாழ். (Jaffna) நெடுந்தீவு – மதவடியில் நேற்று (24.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்த நிலையில் ஆனின் சடலம்!

Maash

“வடபுலமே எங்கள் தாயகம்” மீளக்குடியேறும் உரிமையை எவரும் தடுக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine

சம்பந்தனும், சுமந்திரனும் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

wpengine