செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் , வாந்தியெடுத்தவர் திடீர் மரணம் . !

வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் என்ற  53 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, சாலைக்கு வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாலை அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நானாட்டான் பிரதேச சபையின் முடிவுகள் தன்னிச்சையான முறையில் நடைபெறுகின்றன.

wpengine

3 ஆம் திகதிக்குள் வடக்கு மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி

wpengine

“காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” றிசாத்துக்கு இது ரொம்பப் பொருத்தம் – அசாருதீன்

wpengine