பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன், நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் விளக்கமறியலில்..!

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் திங்கட்கிழமை (17) சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.

இதன்போது குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

வவுனியாவில் அரசாங்க வாகனங்கள் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

wpengine

மன்னார் பகுதியில் 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

Maash

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சந்தித்தார்.

wpengine