(எம்.எச்.எம்.இப்றாஹிம்)
2002ம் ஆண்டு ரணில் பிரபா ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களை குழுக்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் பின் ஆயுதங்களோடு புலிகள் வெளியில்வந்து செயல்பட்டார்கள்.
அப்போது புலிகள் முஸ்லிம்களிடம் கப்பம் கேட்பது தொடக்கம், முஸ்லிம்களை கடத்தி கொண்டுபோய் கொலை செய்யும் வேலையையும் ஆரம்பித்திருந்தார்கள். அதன் தொடக்கமாகத்தான் வாழைச்சேனையிலே இரு மையத்துக்களை நடுரோட்டில் போட்டு எறித்தார்கள். அதன் பின் மூதூர் தொடக்கம் கல்முனைவரை அவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்தால் யார் பாதுகாப்புக் கொடுப்பதென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடாததன் காரணத்தினால், இலங்கை ராணுவம் முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
இந்த நிலையில்தான் ஒருநாள் கல்முனை நகரை கொள்ளையடிப்பதற்காகவும், அந்த பசாரை எறிப்பதற்காகவும் புலிகள் ஒன்றுகூடினார்கள். இந்த விடயத்தையறிந்த நமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் கல்முனை நகரை பாதுகாக்க கடும் முயற்சியெடுத்தார். அந்த நேரம் கல்முனை பொலிசாரும், காரைதீவு விசேட அதிரடிப்படையினரும் பகிரங்கமாக உதவிசெய்ய முன்வரவில்லை. அதற்கு அவர்கள் கூறியகாரணம் ஒப்பந்தத்தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பதனாலாகும்.
இந்த விடயத்தின் பாரதூரத்தை அறிந்த ஹரீஸ் அவர்கள் இரவோடு இரவாக மு.காங்கிரஸின் தானைத்தளபதி ஹக்கீம் அவர்களிடம் உதவி கோரியுள்ளார். படுத்துக்கொண்டு சோம்பல் முறித்துக்கொண்டிருந்த ஹக்கீம் அவர்கள், நான் பிரதமர் ரணிலிடம் கதைத்து பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்கின்றேன் போனை வையுங்கள் என்றாராம்.
சில நிமிடங்களின் பின்… தானைத்தளபதியும், கிழக்கு மக்களின் மேல் உயிரையே வைத்திருக்கும் நமது அன்புக்கும் பாசத்துக்குமுறிய தலைவர் ஹக்கீம் அவர்கள் ஹரீசியிடம் சர்வசாதாரணமாக கூறினாராம்…பிரதமர் ரணில் இராணுவத்தை அனுப்பி உங்களுக்கு பாதுகாப்புதர மறுத்து விட்டார் என்றும். அதுமட்டுமல்ல ராணுவத்தை அனுப்பும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உலக நாடுகள் எங்களுக்குத்தான் பிரச்சினைப்படுத்துவார்கள் ஆகவே நீங்களாகவே அந்த பிரச்சினைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் ரணில் கூறிவிட்டார் என்றாராம்.
இதனைகேட்ட ஹரீஸ் அவர்கள் ரணிலுக்கும் ஹக்கீமுக்கும் ஏசிவிட்டு போனைவைத்தாராம். அன்றிரவு ஹரீஸ் எம்பி அவர்கள்தான் விடிய விடிய டவுணுக்குள் நின்று பிரச்சின நடந்துவிடாமல் பாதுகாத்தார் என்ற விடயமும் உண்டு.
ஆகவே…முஸ்லம் சமூகம் இந்த சம்பவத்தை மறந்துவிட்டது. ஆனால் வரலாறுகள் ஒருநாளும் அழிந்துவிடாது என்பதே உண்மையாகும்.
குறிப்பு ; அந்த நேரம் ஹக்கீம் அவர்கள் ரணிலின் ஆட்சியில் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்தார். என்பதுடன் இந்த சம்பவத்தின் சாட்சியும் இன்ற பிரதி அமைச்சர்தான் என்பதையும் புரிந்து கொள்ளவும்.
இதனால்தான் சொல்லுகிறோம்…அம்பாரை பிரச்சினையல்ல எந்த பிரச்சினைக்கும் நமது தலைவர்கள் ஒரு தீர்வையும் பெற்றுத்தற மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்காக உயிரைக் கொடுக்கும் வாக்காளப் பெருமக்களும், போராடிகளும் இருக்கும்வரை அவர்களின் காட்டில் மழைதான்.