பிரதான செய்திகள்

யானை சின்னல் எதிர்வரும் பொதுத்தேர்தலில்!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் கீழ் வரும் முன்னணி கட்சிகள், ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டும் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியசக்தியின் யாப்பை பொறுத்தவரையில் அது ஒரு கட்சியின் யாப்பு.அது ஒரு முன்னணிக்கான யாப்பு அல்ல. இந்தநிலையில் அந்தக் கட்சியின் சின்னத்தின்கீழ் ஏனைய கட்சிகள் போட்டியிடமுடியாது.


எனவே முன்னணி கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துகொள்வது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


இந்தநிலையில் யானை சின்னத்தின்கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது என்று செயற்குழு தீர்மானித்தது.
இதேவேளை வேட்பாளர் நியமனக்குழுவில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச்செயலர் அகில் விராஜ் காரியவசம், உதவிதலைவர் ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம் மற்றும் ஐக்கிய தேசிய சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் அடங்கும் யோசனை ஒன்றும் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகுவதாக அகில விராஜ் காரியவசம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.


கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை கட்சியின் தலைவர் ஏற்றுக்கொண்டாரா? என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை

Related posts

பிரதமரின் தேக சுகத்திற்கு இப்தார்! முன்வரிசையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பிராத்தியுங்கள்

wpengine

பொலிகண்டி போராட்டத்தில் அ.இ.ம.கா உறுப்பினர்கள் பலர் பங்கேற்பு

wpengine

GCE O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 6 மாத கால பயிற்சிநெறி!

Editor