செய்திகள்பிரதான செய்திகள்வவுனியா

யானையுடன் மோட்டர்சைக்கிள் மோதி வவுனியா இளைஞன் மரணம் . .!

யானையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வவுனியா பட்டாணி சு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ் (28 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது சக நண்பரான சயான் (22 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோண மலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. .

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை இராஜாங்க அமைச்சர் தயாசிறி

wpengine

கிளிநொச்சி வர்த்த சங்கப் பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு

wpengine

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ இன்று

wpengine