பிரதான செய்திகள்

யானையின் வாலில் தொங்கும் ஆசாத் சாலி யார் மிப்லால் மௌலவி

யானையின் வாலில் தொங்கும் சாலிக்கு தனிக் கட்சியில் 14379 வாக்கெடுத்த என்னை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என ஐக்கிய சமாதான முன்னணியின்  தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியிள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகேட்டு கொழுபில் 90 வாக்குகளை பெற்றவர் என அஸாத் சாலி ஊடகங்களில் கூறி வருகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட மிப்லால் மௌலவி 14 379 வாக்குகளை பெற்றிருந்தேன் என்பதை நான் அவருக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

பொதுவாக ஜனாதிபதி தேர்தல் என்றாலே முஸ்லிம்கள் கூட தேசிய கட்சிகளுக்கே வாக்களிப்பர்.அனைவரினதும் பார்வைகளும் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருக்கும். இவ்வாறான நிலையில் மிப்லால் மௌலவியினால் 14 379 வாக்குகளை பெற முடியுமாக இருந்தால் அது சாதாரண விடயமல்ல.

இந்த வாக்குகள் மனச்சாட்சியை அடகு வைத்து, உண்மைகள் பலவற்றை மறைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏசிப் பெற்றவைகள் அல்ல. அசாத்சாலி பெற்ற வாக்குகள், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என்ற பெயரில் இனவாதத்தை தூண்டி பெறப்பட்டவையாகும். ஞானசார தேரரின் செயற்பாடுகளுக்கு இனவாதப் பேச்சுக்களே வலுச் சேர்த்தன. முடியுமென்றால் அசாத்சாலி தனித்து நின்று ஒரு தேர்தலையாவது எதிர்கொண்டு வெற்றிகொள்ளட்டும்.

தனிக்கட்சியில் புத்தளம் சென்றெல்லாம் படு தோல்வியை தழுவிய அசாத்சாலி இனவாதத்தை தூண்டியே முஸ்லிம்கள் ஆதரவை பெற்றார். முஸ்லிம்களை பலிகொடுத்து வாக்கு பெற்றிருந்தார். முஸ்லிம்களை பலி கொடுத்து அரசியல் செய்ய எங்களுக்குத் தெரியாது. இப்போது முஸ்லிம்கள் அவரது உண்மை முகத்தை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இளம் கண்டுபிடிப்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

வாகன இறக்குமதி ஆறு மாதத்திற்கு தடை! 2வருடம் நீடிப்பு

wpengine

சல்மானை தொடர்ந்தும் எம் பி பதவியில் இருத்துமாறு பாலமுனை மாநாட்டிற்கு மகஜர் வருகிறது.

wpengine