பிரதான செய்திகள்

மோட்டார் வாகன இலக்கத் தகடுகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம்

யாழ்.மாவட்­டத்தில் இது­வரை கால-மும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்­பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்­திற்கு கிடைக்­கப்­பெற்­றமை தொடர்பில் மோட்டார் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்­தி­லேயே பார்­வை­யிட்டு வந்­தனர். 

இதனை இல­கு­வாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்­போது யாழ்.மாவட்ட செய­லக உத்­தி­யோ­க­பூர்வ இணையத்­த­ளத்தில் பொது மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இச் சேவை­யினை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செய­லக உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்திற்குள் பிர­வே­சித்து வலது பக்க மூலையில் vehicle number plates ஊடா­கப்­பெற்றுக் கொள்­ளலாம்.

இந்த நடை­மு­றையின் மூலம் வீட்டில் இருந்­த­வாறே தமது வாகன இலக்கத் தக­டுகள் கிடைக்­கப்­பெற்றுள்­ள­னவா என்­பதை அறிந்­து­கொண்டு திருப்­தி­க­-ர­மான அரச சேவையைப் பெற்றுக் கொள்­ளலாம் என யாழ்.மாவட்ட  அர­சாங்க அதிபர்  நா.வேத­-நா­யகன் தெரிவித்­துள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அநீதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவிப்பு

wpengine

கல்பிட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மாபெரும் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’

wpengine

அந்த நபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் நான் கோரவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine