பிரதான செய்திகள்

மோடியுடன் நானும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்லையில் உள்ள விகாரையொன்றில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாக பூரணை தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாளை மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

இதன் பின்னர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை திறந்துவைப்பதுடன், நோர்வூட் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டமொன்றிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில், மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

Related posts

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

wpengine

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine

திருகோணமலையில் சூழலுக்கான பாதிப்புகளை நிறுத்த வேண்டும்: மஹ்ரூப்

wpengine