பிரதான செய்திகள்

மோடியின் வெசாக் தின நிகழ்வு! 85நாடுகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தனது மரியாதையையும், வணக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெசாக் தின நிகழ்வுகள் இன்று அரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் 85 நாடுகளை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதன்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஸவிற்கு இந்தியப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

பதிலுக்கு மஹிந்தவும் இருகரம் கூப்பி தனது மரியாதையை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமரை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று நடைபெற்ற வெசாக் நிகழ்வுகளில் இருவரும் தமது மரியாதையை வெளிப்படுத்தி உள்ளனர்.

Related posts

மன்னார் பிரதேச செயலக வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி!அதிகாரிகள் உரிய பதில் வழங்குவதில்லை

wpengine

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொட்டைத்தலை

wpengine

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ அமைச்சர் ரிஷாட்

wpengine