பிரதான செய்திகள்

மோசடி வெளிவந்தால் அமைச்சு பதவிக்கு ஆபத்து அமைச்சர் ஹக்கீம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தில் அப்போது நடந்த மிகப் பெரிய மோசடியை வெளியிட்டதால், தனக்கு அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மானெல்லையில் நேற்றைய  தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய வருமான வரி திணைக்களத்தில் நடந்த பெறுமதி சேர் வரி மோசடி குறித்த விசாரணைகளை நானே நடத்தினேன். விசாரணை நடத்தி அறிக்கையை கையளித்த போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துகின்றனர். அவர் எப்போதும் இப்படியான மோசடிகளை செய்ய மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. எந்த அரச தலைவருக்கு எதிராக எதனையும் கூறலாம். வெள்ளை வான்கள் வருவதில்லை. எவரும் காணாமல் போவதில்லை.
எவரும் சுதந்திரமாக பகிரங்கமாக பேசக் கூடிய காலத்தை நாங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தெரிவுக்குழு, பொது கணக்கு தெரிவுக்குழு ஆகியவற்றின் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முனனர் இப்படி நடந்ததில்லை. பிரதமர் தாமாக முன்வைத்து இந்த பதவிகளை எதிர்க்கட்சிக்கு கொடுத்தார்.

அப்படி செய்த பிரதமர் மீது தற்போது குற்றம் சுமத்துகின்றனர். சுனில் ஹந்துன்நெத்திக்கு பிரதமரை பொது நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை வழங்கினார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமர் தனக்கு விருப்பமான, தமது அமைச்சர் ஒருவருக்கு அந்த பதவியை கொடுத்திருக்கலாம் என்றும் மகிந்த ராஜபக்ச காலத்தில் அமைச்சர்களுக்கே தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தாஜூடின் கொலை! அனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா பிணை முறுப்பு

wpengine

றிஷாட்டை விடுதலை செய்யக்கோரி மு.கா உறுப்பினர் கையொப்பம்

wpengine

முசலி பிரதேச சபையினால் தெருவிளக்குகள் பொறுத்தப்படுமா? முகநூல் பாவனையாளர்கள் விசனம்

wpengine