பிரதான செய்திகள்

மொஹமட் ஷாகிப் சுலைமான் கடத்தல்! தெரிந்தால் அறிவிக்கவும்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – 04 – கொத்தலாவல எவன்யூ – இலக்கம் 21இல் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் ஷாகிப் சுலைமான் என்பவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த 21ம் திகதி இரவு 11.15 அளவில் வீட்டிக்கு அருகில் வைத்து அவர் காணாமல் போயிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என, பம்பலபிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதன் பொருட்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பொலிஸார், இது குறித்த தகவல் அறிந்தால் கீழ் வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 071-8591727 – கொழும்பு குற்ற பிரிவுப் பணிப்பாளர்
071-8591735 – குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி
071-8591580 – பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம்

Related posts

ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் வௌியிட்ட டிரம்ப்?

wpengine

வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் அரசியல் தலையீடு

wpengine

சீனாவின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுத்திட்டம்!

Editor