பிரதான செய்திகள்

மொட்டு கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் 10பேர் ஒரு பெண்ணும் கைது

நேற்று (21) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் (பொதுஜன பெரமுன கட்சி) மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணிமுறிப்பு பகுதியில் எதுவித அனுமதியும் அற்ற நிலையில் பாரிய இரண்டு கற்களை அகன்ற கனரக வாகனங்களின் கொண்டு சென்ற வேளை இராணுவத்தினரின் வீதி சோதனை நடவடிக்கையின் போது மறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பெண் உள்ளிட்ட 10 பேரே இவ்வாறு ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய கல்லினை ஏற்றிச்சென்ற வாகனம் மற்றும் பட்டா வாகனம் மற்றும் சொகுசு வாகனம் என்பன ஒட்டுசுட்டான் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ளது. புதையல் தோண்டும் நடவடிக்கை என பொலிசாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைதானவர்களையும் சான்றுபொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தும் சட்டநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine

முஸ்லிம் அர­சி­யலில் தனிப்­பட்ட ‘கிசு­கிசு’ பற்றி நான் அறிவேன்! – பசீர் ஷேகு­தாவூத்

wpengine

மன்னார் நகரை அசுத்தபடுத்தும் பருவகால பறவைகள் பாதுகாப்பது யார்?

wpengine