பிரதான செய்திகள்

மைத்திரி ,மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்ற நிலையில் தேர்தல் குறித்தும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது.

அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகள் அனைத்தையும் அடுத்து அமையும் எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

சிவப்பு சீனி விலையில் மாற்றம்!

Editor

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கத் தயார்: ரத்ன தேரர்

wpengine

ராவண பலய அமைப்பின் சொந்த தேவைக்கு 7 வாகனம் கொடுத்த விமல் வீரவன்ச

wpengine