பிரதான செய்திகள்

மைத்திரியினை சந்தித்த அமைச்சர் சரத் பொன்சேகா

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார்.

கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் பரவியிருந்தன.

அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற தினத்தில் அவர் வௌிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்ததன் காரணமாக குறித்த அமைச்சுப் பதவி அவருக்கு ஒதுக்கப்படவில்லை.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்க நேர்ந்தது.
இந்நிலையில் வௌிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படாத நிலையில் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பாக மௌனம் காக்கத் தலைப்பட்டிருப்பதாகவே தகவல்கள் வௌியாகியுள்ளன.

Related posts

ஜனவரியில் தேர்தல் நடாத்த வாய்ப்பு! ஐ.தே.க.தயார்

wpengine

”ஒரு பு மீண்டும் மலா்கிறது” நுால் வெளியீட்டு விழா நிகழ்வு

wpengine

பாகுபலி -2 ஏப்ரல் 14-ந் திகதி………

wpengine