ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்புவது மிகப்பெரிய பிழை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி தலையீடு செய்யவில்லை.
இதன் மூலம் மீளவும் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால், கட்சி உறுப்பினர்களை ஒரே நிலைப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை நம்பி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தமை கூட்டு எதிர்க்கட்சி விட்ட பெரிய பிழையேயாகும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் வெற்றியீட்டினாலும் அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.