பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை சுற்றி ஒரு இயக்கம் இயங்குகின்றது-அசாத் சாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி ஒரு இயக்கம் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் செயற்பாடுகளினால் ஜனாதிபதியே ஒரு சமயம் தலைகுனிய வேண்டிய நிலை வரக்கூடும்.

இதனால் அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அசாத் சாலி நேற்று சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் வழங்குவதற்கு அரச நிர்வாகத்தில் சிலர் தடை ஏற்படுத்தும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் அதிகமானோர் நாய்களையும், பூனைகளையும் பாதுகாப்பதிலே கூடுதலான கவனம் செலுத்துகின்றனர்.

மனிதன் வாழ்ந்தால் தானே நாயும் பூனையும் வாழும். பொதுமக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு போராட வேண்டிய சூழ்நிலைதான் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்” தொழில் சங்கத்திடம் கோரிக்கை

wpengine

ஐரோப்பாவில் பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு – 8 மாணவர்கள் பலி!

Editor

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine