Breaking
Sun. Nov 24th, 2024
(களமுனை ஊடகவியலாளர்,நீலன் நடராஜா)

ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம்’ என்ற இளையோர் புரட்சிப்படையொன்று திடீரென களமிறங்கி நடத்திய புரட்சிகர அரசியல் தாக்குதலில் தமிழர்களின் தற்போதைய அத்தனை அரசியல் கட்சிகளும் நிலைகுலைந்து தடுமாறி தாம் என்ன செய்வதென்று அறியாது கிடுநடுங்கி போனார்களென்றால் அது ஒருபோதும் மிகையாகாது.

அப்படி என்ன பலத்தைதான் இந்த ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம்’ என்ற இளையோர் அமைப்பு தான் பயன்படுத்தியது?என்ற பலரது கேள்விகளுக்கும் இரகசியமாக கிடைத்த சில தகவல்கள் இதோ…..

இவர்கள் இதுவரை அதாவது முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடைபெறும்வரை தாயகத்து மக்கள்மத்தியிலோ அன்றி வேறெந்த நபர்களாலுமோ அறியப்படாதிருந்த இந்த இளையோர் படையினால் எப்படி ஒரு பிரமாண்டமான துணிகர செயற்பாட்டை மௌனமாக இருந்துவிட்டு திடீரென புகுந்து பெரும் அரசியல் பலத்தோடிருந்த தமிழ் அரசியல் பூதங்களுக்கு எதிராக துணிந்து நடத்தமுடிந்தது?

அதிசையம் ஆனால் உண்மை என்று பலரும் கூறும் இந்த வாரத்தைக்கு இந்த இளையோர் படையும் விதிவிலக்கல்ல என்றே கூறமுடியும்.

இந்த இளையோர் படை தொடர்பாகவும், இவர்களின் திடீர் எழுச்சி தொடர்பாகவும் இன்றுவரை எமது மக்கள் அறிந்ததில்லை என்றே கூறமுடியும்.அப்படி எமது மக்களால் இன்னும் அறியப்படாதிருக்கும் இந்த இளையோர்கள் எப்படி யாழ் பல்கலை மாணவர்களின் ஒத்துழைப்பை பெற்று தமது புரட்சித் தளத்தின் திட்டங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை தமது துணிகர திட்டங்களுக்கு அமைவாக நடத்திமுடித்தார்கள் என்பதில் இன்னும் மர்மங்களே தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இவர்கள் யார்?
இவர்கள் எத்தனைபேர்?
இவர்களின் தலைவர் யார்?
இவர்களை யாரும் இயக்குகிறார்களா?
இவர்களுக்கான பொருளாதாரம்?
இவர்களின் எழுச்சியின் நோக்கம்தான் என்ன?
என்ற கேள்விகளும் இன்றுவரை மூடு மந்திரமாகவே உள்ளது.
இந்த இளையோர் புரட்சிப்படை இலங்கை அரசியலில் தற்போதைய தமிழ் கட்சிகள்போன்று தம்மையும் களமிறக்குமா? என்ற எமது சந்தேகங்களுக்கு இல்லை’ என்ற பதில்மட்டும் 100%வீதமான ஆதாரத்தோடு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அப்படி என்ன ஆதாரம் கிடைத்துள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கான ஆதாரம்தான் மே18′ முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை மாணவர்கள் பொறுப்பேற்றதும்,எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தமுடியாதபடிக்கு தடைகளை ஏற்படுத்தியதும்,தமது புரட்சிப்படையின் ஒத்துழைப்போடு மாணவர்களின் உந்துருளி பேரணியை நிகழ்த்தியதும்,இறுதி நிகழ்வினில் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் பொதுச்சுடர் ஏற்றப்படும் பகுதிக்குள் நிற்கமுடியாதென்ற இறுக்க நிலையை நடைமுறைப்படுத்தியதையும் மற்றும் அத்துமீறி யாரும் மத்திய பகுதிக்குள் நுழைய முயன்றால் அவர்களை எந்தவித தயவு தாட்சண்யமுமின்றி நையம்புடைத்து அப்பகுதியைவிட்டு வெளியேற்றவேண்டும் என்ற இரகசிய கட்டளையொன்றும் தயார்நிலையில் இருந்ததாகவும் உள்ளக தகவல்கள்மூலம் அறியமுடிகின்றது.

இங்கே ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் என்கிற இளையோர் புரட்சிப்படையானது இலங்கை சிங்கள அரசின் அரசியல் நீரோட்டத்தில் தன்னை ஒருபோதும் இணைத்து செயற்படாதென்கிற முடிவின்பிரகாரமே அது மே18’முள்ளிவாய்க்கால் நிகழ்வினில் இலங்கை அரசின் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பிரயாணித்துவரும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் தாம் ஓரங்கட்டியதற்கு முதன்மை காரணமாக இருக்கலாம்..?

மேலும் வடமாகாண முதல்வரான திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை மட்டும் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் மத்திய பகுதிக்குள் நிற்பதற்கு இளையோர்படை தாம் அனுமதித்ததன் நோக்கம்கூட, தமிழினத்தை ஏமாற்றி பிழைத்துவரும் தமிழ் அரசியல்வாதிகள்மீதான அவரின் பாரபட்சமற்ற கடும்போக்கை இளையோர்படை வரவேற்கும் முகமாகவே அவரை மத்தியபகுதிக்குள் அனுமதித்ததாக அறியமுடிகின்றது.

இதேவேளை முன்னாள் போராளிகளென தம்மை கூறிக்கொண்டு ஒருசில சந்தேக நபர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக இலங்கை சிங்கள அரசின் அரசியல் நீரோட்டத்தில் தம்மை “ஜனநாயக போராளிகள் கட்சி” என்று இணைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளின் பாணியில் செயற்பட்டுவருவதை நாம் யாவரும் அறிந்ததொன்றே’.

அப்படி செயற்பட்டுவரும் சந்தேக நபர்களில் ஒருவரான துளசி என்பவர் முள்ளிவய்க்காலின் பொதுச்சுடர் ஏற்றப்படவிருந்த மத்திய பகுதிக்குள் தன்னை முன்னாள் போராளியென கூறிக்கொண்டு வடமாகாண முதல்வரோடு தன்னை ஒட்டிக்கொண்டு நுழைக்கமுயன்றவேளை மத்தியபகுதியில் கடமையிலிருந்த இளையோர் புரட்சிப்படை வீரர்களினால் எச்சரிக்கப்பட்டு அவ்விடத்தைவிட்டு அகற்றப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

நிலமை இவ்வாறிருக்க அம்பாறை மாவட்டத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வினில் கலந்துகொள்ளவந்த இறந்தோரின் உறவுகளுடன் கருணா குழுவின் உறுப்பினரான வடிவேல் சசிதரன் உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட துரோக கும்பலொன்று மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலுக்கு வருகைதந்ததுடன், இளையோரின் தலைமையில் நடந்த முள்ளிவய்க்கால் நிகழ்வுகளை குழப்பும் முகமாக முள்ளிவாய்க்காலின் பிறிதொரு பகுதியில் கொடிகளை நாட்டி இறுதிப்போரின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்து புலிகளை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்த சந்தர்ப்பத்தில் புலிகளால் அவர்கள் கருணாகுழு உறுப்பினர்கள் என இனங்காணப்பட்டு அழிக்கப்பட்ட துரோகிகளுக்கு மேற்குறிப்பிட்ட கருணா குழுவின் சகாக்கள் தாம் பிரத்தியேகமாக நடத்தவிருந்த நிகழ்வினையும் இளையோர் புரட்சிப்படை அப்பகுதியில் இனங்கண்டு அவர்கள் நாட்டியிருந்த கொடிகளையும் ஏனயை பொருட்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் கருணா குழுவின் உறுப்பினர்களையும் எச்சரித்து விரட்டிய சுவாரசியமான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இளையோர்படைகளின் இந்த துணிகர நடவடிக்கைகள் ஊடாக ஆத்திரமுற்றுள்ள கருணா குழுவின் சகாவான வடிவேல் சசிதரன் என்பவன் தனது முகநூல் வாயிலாக வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதத்தை தூண்டிவருவதுடன், மாணவர்கள் தம்மை பிரதேசவாத சொற்களால் திட்டியதாக மாணவர்கள்மீது அபாண்டமான பொய்களையும் கட்விழ்த்து வருவதை அவனது கருத்துக்கள் ஊடாக அவதானிக்கமுடிகின்றது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *