பிரதான செய்திகள்

மே மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்- ஜனாதிபதி

2017 மே மாதம் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன்  இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எந்த சந்தரப்பத்திலும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனவும், அதனால்தான் தேர்தல் நடைத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வருடம் மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் உருவான விதம் கண்டுபிடிப்பு!

Editor

வவுனியாவில் பெண் ஒருவர் தற்கொலை

wpengine

அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை

wpengine