பிரதான செய்திகள்

மே தினத்திற்கான விசேட பாதுகாப்பு திட்டம்!

நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேற்படி பிரதேசங்களில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறும் மே பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

தமக்கு பலரால் அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்குங்கள்.!

Maash

சீனாவின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுத்திட்டம்!

Editor

Braking பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம்

wpengine