அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மூன்றில் இரண்டு பலத்தை தேவையான மாதிரி மாற்ற நினைப்பவர்களுக்கு தமது அனுதாபம .

மூன்றில் இரண்டு  அரசியல் பலம் உள்ளதற்காக தேர்தல் முறைகளை தமக்குத் தேவையான மாதிரி மாற்றிக்கொள்ள  முடியும் என்பது போல் அரசாங்கம்  நினைத்துக் கொண்டிருக்கின்றது அது தொடர்பில் எமது  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

கொழும்பில் இடம்பெற்ற நக்பா தின நிகழ்வை அடுத்து அவர் இதனை தெரிவித்தார் .

பொதுஜன பெரமுன போன்ற  காட்சிகளோடு நாம் கூட்டுச்சேர மாட்டோம் என்று சஜித் பிரேமதாச முன்னர் கூறியிருந்தார் இப்போது சபைகளில் ஆட்சி அமைக்கவும் , அதிகாரத்தை கைப்பற்ற வும் அவர்களோடு கூட்டு சேருவது சரியா?

ரவுப் ஹக்கீம் – அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை.  அத்துடன்.. இங்கு தான்தோன்றித்தனமாக சர்வாதிகார வடிவில் நாட்டின் அரசியலை கொண்டு போக முயற்சிக்கும்  தரப்பினருக்கு எதிராக,  ஜனநாயகத்துக்காக  மாற்று வழி ஒன்றை நாம் யோசிக்க வேண்டும்.  மூன்றில் இரண்டு  அரசியல் பலம் உள்ளதற்காக தேர்தல் முறைகளை தமக்குத் தேவையான மாதிரி மாற்றிக்கொள்ள  முடியும் என்பது போல் அவர்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது தொடர்பில் எமது  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேள்வி – அப்படி என்றால் உங்களுக்கு கம்மன்பில போன்றோர் இருக்கும் மேடையில் இருக்க முடியுமா?

இல்லை இது கம்மன்பில போன்றவர்களை பற்றி அல்ல எமது பிரச்சினை.. நாம் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிக்கு ஏதும் சவால் ஏற்படுமாயின் நாம் அது தொடர்பில் நிச்சயமாக நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேபோல் ஆளும் கட்சியினரும் சில சபைகளில் எம்மிடம் ஆதரவு கேட்டால் நாம் அது தொடர்பிலும் பரிசீலித்து பார்ப்போம்..  ஆனால் நாம் கூட்டு சேர்ந்துள்ள சமகி ஜன பலவேகய  கட்சிக்கு தான் முதலிடம் வழங்குவோம்.  அதே நேரம்  சில பிரதேசங்களில் ஆளுங்கட்சி எம்மிடம்  ஆதரவு கேட்டாலும் நாம் அது தொடர்பில் பரிசீலித்து பார்ப்போம்.   அதுபோல எமக்கும் 10 சபைகளில் ஆட்சி அமைக்க முடியுமாக உள்ளது அதற்குத் தேவையான ஆதரவை நாம் வேறு சில கட்சிகளிடமும் எதிர்பார்ப்போம் அது இந்த அரசியல் தேர்தல் முறையில் உள்ள தவறு என அவர் தெரிவித்தார்.

Related posts

மஹிந்த வழிபட இருந்த நிகழ்வு இரத்து!வீதியினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அமைச்சரவை மாற்றம் தாழ்த்தப்படும்

wpengine

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Maash