உலகச் செய்திகள்தொழில்நூட்பம்

மூன்றாவது காதலனுக்கு நியூயோர்க்கில் பரிசு கொடுத்த நயன்தாரா

இயக்குனரும், தனது காதலருமான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நியூயோர்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார்.

சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

இப்போது விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இவருக்கு நேற்று பிறந்த நாள்.
இதையடுத்து காதலருக்கு வித்தியாசமான பரிசு அளிக்க நயன்தாரா விரும்பினார்.

அதன்படி நேற்று முன்தினம் திடீரென விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அவர் அமெரிக்கா பறந்தார்.
நியூயோர்க்கில் நேற்று நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த படம் நேற்று இணையதளத்தில் வைரலானது. அமெரிக்காவில் மேலும் 2 நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு ரகசிய திருமணம் முடிந்து, அமெரிக்கா சென்றிருப்பதாக பரபரக்கிறது சினிமா வட்டாரம்.

Related posts

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

wpengine

குத்தாட்டம் போட ரெடியான முதல்வர்: தடுத்து நிறுத்திய மனைவி

wpengine

முஹம்மது ஷாஹித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

wpengine