பிரதான செய்திகள்

மூத்த போராளி இப்றா லெப்பையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால மூத்த போராளி வாழைச்சேனையைச் சேர்ந்த இப்றா லெப்பை (ஜே.பி) அவர்களின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்ததாகவும், அவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக செய்த அரும் பெரும்பணிகளையும் – சேவைகளையும் நன்றியுணர்வுடன் நினைவு கூறுவதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குவதற்கு 1987ஆம் ஆண்டு தொடக்கம் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களோடும், எம்மோடும் இணைந்து அரும்பாடுபட்ட ஒருவர் இப்றா லெப்பை. அவர் கட்சியின் வளர்ச்சிக்காக செய்த அர்ப்பணிப்புக்கள் காரணமாக 1990ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரபினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு உழைத்த ஒருவர் இப்போது மரணமடைந்துள்ளார்.

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவரின் கப்ரை சொர்க்க பூஞ்சோலையாக ஆக்குவதற்கு துஆ செய்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருளையும் ரஹ்மத்தையும் வழங்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போமாக, என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக் ஆபாச விடியோ! வைரஸ் கீளிக் பண்ணவேண்டாம்.

wpengine

மொட்டுக்கட்சி தனித்துபோட்டியிடுவது குறித்து மந்திர ஆலோசனை

wpengine

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது

wpengine