பிரதான செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் மகன் காலமானார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக்6++6 ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37) இன்று(11) மாலை காலமானார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். இருதய நோயினால் கொழும்பு பெரிய வைத்தியசாலை இருதய சிகிச்சைப்பிரிவில் திங்களன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை (12) காலை 10.30 மணிக்கு மினுவாங்கொடை கல்லொழுவை முனாஸ்வத்தையிலுள்ள 262/13ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கல்வொழுவை ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கஞ் செய்யப்படும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தீர்மானம் ஒத்திவைப்பு

wpengine

கால்நடை உணவை உண்ணும் சிரியா குழந்தைகளின் அவலநிலை

wpengine

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தூதுவர்

wpengine