பிரதான செய்திகள்

மூதூரிலிருந்து கட்டுநாயக்க செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீது கல்வீச்சு

மூதூர் டிப்போவிலிருந்து கட்டுநாயக்க வரையான பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

மூதூரிலிருந்து கிண்ணியா மற்றும் குருநாகல் ஊடாக கட்டுநாயக்க நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பஸ் சேவை மீது கடந்த சில நாட்களாக குருநாகல் பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டு வருவதாக மூதூர் டிப்போ முகாமையாளர் ஏ.எல். நவ்பீர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலால் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தொடர்ந்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மூதூர் டிப்போ முகாமையாளர் குறிப்பிட்டார்.

கல்வீச்சு நடத்தப்பட்டமை குறித்து கட்டுநாயக்க, திவுலப்பிட்டி மற்றும் கொட்டதெனிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பிரேமதாசவின் கனவை நிறைவேற்ற மீண்டும் கம்உதாவ வேலைத் திட்டம்

wpengine

கிழக்கு ஆளுநரை சந்தித்த சம்மாந்துறை தவிசாலர் மாஹிர்: பிரதேசத்தின் குறைகள் மற்றும் அபிவிருத்தி சம்மந்தமாக ஆராயப்பட்டது.

Maash

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு

wpengine