பிரதான செய்திகள்

மூடப்பட்டுள்ள யால சரணாலயம் இரவில் அமைச்சர் புதையல் வேட்டையின் ஆரம்பமா?

யால சரணாலயம் மூடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஒருவர் தினமும் இரவில் அங்கு செல்வதன் மர்மம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. ஜானக, புதையல் வேட்டையின் ஆரம்பமா என்று மக்கள் சந்தேகம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய வருமானத்தை ஈட்டுகின்றது. அதிலும் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 வீதமானோர் தென் மாகாணத்திற்கு செல்லாமள் போக மாட்டார்கள். யால சரணாலயமே இதற்கு காரணம். ஆனால் கடந்த பல மாங்களாக இந்த சரணாலயம் மூடப்பட்டுள்ளது. பகலில் மூடு விழா காணும்  யால சரணாலயத்திற்கு இரவு 9 மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செல்வது எதற்காக என தெரிய வில்லை.

கடந்த காலங்களில் முக்கிய சந்திஷ்டானங்கள் உடைக்கப்பட்டு புதையல் திருடப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகள் யால சரணாலயத்தில் இரவில் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.

Related posts

“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்”

wpengine

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு

wpengine

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine