முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் வட மாகாண
சபை உறுப்பினர் ரயீஸ்
இன்று தனது மாகாண சபை உறுப்பினர்
பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.
தனது ராஜினாமா
கடிதத்தை அவர் இன்று நண்பகல் வடமாகாண சபை
தலைவர் சிவஞானம்
அவர்களிடம்
கையளித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
முசலி பிரதேச சபையை
கைப்பற்றும்
வியூகங்களில் ஒன்றாக
மாகாண சபை உறுப்பினர்
ராயிஸ் இராஜினாமா
செய்துள்ளதாக
தெரிவிக்கப்படும்
அதேவேளை அவரு உறுப்பினர் பதவி முசலிக்கு
வழங்கப்படும் என
தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ரயீஸ் அவர்களை நாம் தொடர்புகொண்டு நாம் கேட்ட போது
“ கட்சியின் வளர்ச்சியை நோக்காக கொண்டு தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறிய அவர் தனது ராஜினாமா கட்சி நலனை கருத்தில் கொண்டு தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானம் என குறிப்பிட்டார்.
அதே நேரம் தனக்கு பதவிகள் முக்கியமல்ல எனவும் கட்சியின் வளர்ச்சியை நோக்காக கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் எதிர்காலத்தில் தொடர்ந்து தனது நலன்களுக்கு அப்பால் கட்சிக்காக தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த பதவி கடந்த
மாகாண சபை தேர்தலில்
போட்டியிட்ட பண்டாரவெளி நியாஸ்
அவர்களுக்கு வழங்கப்படும்
என கட்சி வட்டார தகவல்கள்
தெரிக்கின்றன அதேவேளை
அண்மைக்காலமாக
அமைச்சர் ரிஷாத் மீது
குற்றம் சுமத்திவத்தி வரும்
குவைதிர் கானுக்கு
வழங்கப்படலாம் எனவும்
கட்சி தரப்பில் இருந்து
செய்திகள் கசிந்துள்ளன.