Breaking
Mon. Nov 25th, 2024

1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான முஹம்மது ஷாஹித் பங்கேற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பின்னர், இவர் இடம்பெற்ற இந்திய அணி 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாடுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 1986-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தலைமையின்கீழ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.

தற்போது 56 வயதாகும் ஷாஹித், மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கான் நகரில் உள்ள மெடென்ட்டா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முஹம்மது ஷாஹிதின் துரதிர்த்டவசமான அகால மரணத்தின் மூலம் நாட்டுக்காக உத்வேகத்துடன் விளையாடிய ஒரு வீரரை இந்தியா இழந்து விட்டது.

அவரது உயிரை காப்பாற்ற நம்மால் இயன்றதை எல்லாம் செய்தோம். ஆனால், நமது உதவிகளும், பிரார்த்தனைகளும் அவரை காப்பாற்ற இயலாமல் போய்விட்டது, அவரது ஆன்மா சாந்தியடைவதாக!’ என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *