பிரதான செய்திகள்

முஸ்லீம் மீடியா போரத்தின் 20 வது ஆண்டு விழா இன்று

(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 20 வது ஆண்டு விழா இன்று (3) மருதானை அல்ஹிதாய கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம் சுகையிா் கலந்து கொண்டாா்.   தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினா் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற தலைப்பில் தேசிய ஊடக நிறுவனத்தின் பணிப்பாளா் நவாஸ் முஹமட் உரையாற்றினாா்.  மீடியா போரத்தின் மீடியா டயறி, மற்றும் வருடாந்த சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இவ் அமைப்பின் நிருவாக உறுப்பினா்கள் 15 பேர்  பதவிக்கு 30 பேர் போட்டியிட்டனா்  15 பேர்  கொண்ட நிறுவாக உறுப்பினர்கள்  வாக்கெடுப்பின் மூலம் தெரிபு செய்யப்பட்டனா்.

SAMSUNG CSC

தலைவராக ஏகமனாதாக என். எம். அமீன், செயலாளரா  சாதீக் சிகான், பொருளாளராக அஹமத் முனவா். மற்றும் (எம்.பி.எம் பைருஸ்  விடிவெள்ளி  -72 வாக்குகள்  ரசீத் எம் ஹபீல் 61 , ஏ. எஸ் ஜெசீம் 61,  எம் றிபாஸ் -60 மௌலவி முஸ்தபா 56, புர்கான் பீ. இப்திகாா் – 51  ஜெம்சித் 41,  மும்தாஸ் சருக் 49, எம். ஏ. நிலாம் 48, பெரவுஸ் 46, அஸ்கா் கான் 45,  நுஸ்கி முஸ்தாா் 45, சாகிதா 45, ஜாக்கீா் 44,  பாயிஸ் 43 , ஆகியோா் மேற்படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிபு செய்யப்பட்டனா்.SAMSUNG CSC

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை- தினேஸ்

wpengine

பனாமா லீக்ஸ் சர்ச்சைக்கு இடையே! நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

wpengine

முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி

wpengine