Breaking
Thu. Nov 21st, 2024

(Fahmy MB Mohideen)

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும் முஸ்லிம் விரோத நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளைப் பேணுவதே காரணமாகும்.

இந்த நாட்டில் ரணிலுக்கு முன்னைய ஐதேகட்சி தலமைகளின் கீழ் அதிகமான முஸ்லீம் அரசியல்வாதிகள்  கட்சிக்காக அர்ப்பணித்தனர்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ரணில் தலமைத்துவத்தை பெறுவதற்கு முன்னர் அதிகமான முஸ்லீம் தலமைகள் ஜதேகட்சியில் இருந்தனர்.ரணிலின் இரட்டைவேடப் போக்குகளால் முஸ்லீம்கள் மட்டுமல்ல அதிகமான முஸ்லீம் தலமைகளும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லீம்கள் அடிமைகளாக்கப்பட்டனர்.ஜேஆர் ஐயவர்தனவின் இந்த துரோகத்தனமே விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யவும் ,அஷ்ரப் SLMC கட்சியை உருவாக்கவும் அடிகோளாகியது.

ரணிலின் முக்கிய பங்களிப்புடன் செய்யப்பட்ட நேர்வேயுடனான யுத்த நிறுத்தம்.இதில் முஸ்லீம்கள் சிறுகுழுக்கள் என அடையாளமிடப்பட்டனர்.இந்த நேர்வேயின் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்கு ரணில் கைபொம்மையானார்.

இதன்போதுபிக்குகள் சங்கத்தை வைத்திருந்த ஞானதார தேரருக்கு ஐதேகட்சி கோட்டை அமைப்பாளர் லால்காந்த லக்திலக மூலம் நெருக்கம் அதிகமானது.லால்காந்த அமெரிக்க தொண்டு நிறுவனத்தை நடாத்தி அமெரிக்காவில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டவர்.தற்போது ஐனாதிபதி ஆலோசகராக உள்ளார்.இதற்காக தனது வலது கையாக இருந்த நபரை வடமேல்மாகாண தேர்தலில் ஜதேகட்சி சார்பில் போட்டியிடவைத்தார்.

மேலும் 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக சரத்பொன்சேக்காவை ஆதரிக்க ஐதேகட்சி சார்பான பேச்சுவார்த்தையில் ஞானடார தேரர் முக்காய பங்குவகித்தார்.இதற்காக சரத்பொன்சேக்காவிற்கா முதல் பூஜையை இராஜகிரியவில் ஞானதார தேரவே நடாத்தினார்.

துரதிஷ்டவசமாக ஆட்சி மஹிந்தவிடம் கைமாறியதால் ரணில் தனிமையானார்.இருந்தும் மஹிந்தவிற்கு 2009வரையில் நேர்வேயுடனான செயற்பாடுகளுக்கு ரணில் உதவியாக இருந்தார்.இந்தக் காலப்பகுதியிலே ஞானதார தேரருக்கு நேர்வே சர்வதேச நிதியத்தின் ஊடாக 2011ம் ஆண்டு அமெரிக்காவிற்கான 5 வருடவிசா வழங்கப்பட்டது.இதன்போது நேர்வே நாட்டுக்குப் பயணமான தேரருக்கு ஆரம்ப வழிகாட்டல் மற்றும் நேர்வே அபிவிருத்தி நிதியத்துடனான தொடர்பை ரணில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதன்படி Arne Fjortoft ஜ சந்தித்து இன ஐக்கியம் தொடர்பான செயற்திட்டத்திற்கு நிதியைப் பெற்றார்.சிலகாலம் அமைதியாக இருந்தவர் திடீரென ஹலால் பிரச்சனையை கையில் தூக்கினார்.இதன் மூலமே இவரது பயணம் திசைமாற்றம் கண்டது.இதுதொடர்பில் ரணில் 2012  பாராளுமன்றத்தில் நியாயப்படுத்தியே பேசினார்.முஸ்லீம்களை கௌரவப்படுத்தியோ,சார்பாகவோ பேசவில்லை.அதாவது ஐம்மியத்துள் உலமாசபை வழங்கும் சான்றிதழ் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.இதற்கான உந்துதலை ஞானதார தேரே வழங்கினார்.

அதுமட்டுமல்ல ரணிலின் தாயார் Mrs. Nalini Wickramasingha சுகவீனமுற்ற வேளை,அவரின் வீட்டில் நடந்த விசேட பூஜையை நடாத்தியவர் இந்த ஞானதாரதேரர்.

இருந்தும் கோதபயாவின் ஆளுமைக்குள் ஞானதார உள்வாங்கப்பட்டது இன்னொரு சுவாரஷ்யமான விடயமாகும்.

இந்த நிலையில் நேர்வே,அமெரிக்க உறவுகளைத் துண்டித்து சீனா,இந்திய உறவுகளை மஹிந்த முன்னிலைப்படுத்தினார்.

இந்தப் பின்புலத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.மேற்கத்திய இடம்பெயர் தமிழ் அமைப்புகள்,நேர்வே உற்பட பலநாடுகள் இலங்கைக்கு எதிராக விரல்நீட்டியது.இந்த நிலையில் ரணில்+TNA+புலம்பெயர் வெளிநாடுகளின் கூட்டு உருவானது.இவர்களுக்கு நாட்டில் ஆட்சிமாற்றம் தேவைப்பட்டது.

இதற்காக கோதபயாவுடன் நெருக்கமாகிய ஞானதாரவை நேர்வேயினூடாக ரணில் இயக்க ஆரம்பித்தார்.இதன்மூலம் நாட்டில் இனமுரண்பாடுகள் உருவானது.மொத்த தழிழ் மற்றும் முஸ்லீம்களின் எதிரியாக மஹிந்த சித்தரிக்கப்பட்டார்.ராஜிதமூலமாக பேரம்பேச்சு உருவானது.இதன்மூலம் மைதிரி ஊடாக ஆட்சிமாற்றம் வந்தது.

இதுகாலவரையில் ஞானதாரவின் எந்த நடவடிக்கையையும் ரணில் விமர்சித்ததோ அல்லது முஸ்லீம்களுக்கு எதிரான இவரின் செயற்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கவோ இல்லை.

அண்மையில் பலமாதங்களாக ஞானதாரவை இராஜகிரியவில் சம்பிக ரணவக்கவின் பாதுகாப்பில் ரணில் வைத்திருந்தார்.இதன் மூலம் நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கினார்.தற்போது ஞானதாரவிற்கு முழுப்பாதுகாப்பும் வழங்கி  தேவையானபோது பயன்படுத்த அமைதியாக்கி உள்ளார்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக டான்பிரசாத்தை வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தார்.இந்த டான் பிரசாத்திற்கு அரசாங்கத்தின் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு,கொழும்பில் இவருக்கான தங்குமிட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் உற்பட இவரின் தீவிர இனவாத போக்குடைய 12சகாக்கல்  தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இனவாதத்தை பகிரங்கமாகப் பேசி,முஸ்லீம்களை தாக்குகின்ற இவர்களை சிறையில் அடைக்காமல்,ரணில் அடைக்கலம் வழங்கியுள்ளார்.

இஸ்ரேல்,அமெரிக்க  மற்றும சியோனிஷ கொள்கைகளை முதன்மைப்படுத்தி ஆலோசகர்களால் உருவானதே ரணிலின் அரசியலமைப்பு நகல்வரைவு.இதிலும் முஸ்லீம்கள் தொடர்பில் எதுவித பாதுகாப்போ,,உத்தரவாதமோ கிடையாது.மேலதிகமாக வடகிழக்கு இணைப்பிற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஹகீம் மற்றும் சம்மந்தன் போன்றவர்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சியிலே ரணில் ஆட்டமாடுகிறார்.இந்த முஸ்லீம் சமூகத்தின் விரோதப் போக்கினை மேற்கொள்ளும் ஐதேகட்சி இன்று வடகிழக்கு முஸ்லீம்களிடத்தில் தூக்கிவீசப்பட்டுள்ளது.

ஆகவே ஹகீம் இருக்கின்றவரை மீண்டும் ஐதேகட்சியை கிழக்கில் காலூண்ட வைக்கலாம் என்ற பகல்கனவில் ரணில் உள்ளார்.

தற்போது அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் சீர்சிருத்தம் என முஸ்லீம்களை அடிமைச் சமூகமாக மாற்றுகின்ற அடுத்த பரிணாமத்தில் ரணில் உள்ளார்.இந்த சதியை தோற்கடிக்க ரணில் மற்றும் இவர்சார்பான கூட்டுகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஆனால் மக்கள் சரியானபாடத்தையும், ரணிலின் துரோகத்திற்கு பதிலையும் வழங்குவார்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *