பிரதான செய்திகள்

முஸ்லிம் விவகார அமைச்சு வேறு மதத்தவருக்கு வழங்கப்பட வேண்டும்

முஸ்லிம் விவகாரம் தொடர்பான அமைச்சர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சிற்கு வேறு படித்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமைச்சு பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட தேவையில்லை, வேறு மதத்தவருக்கு வழங்கலாம் என அவர் கூறியுள்ளார்.

அடிப்படையவாதம் தொடர்பில் தொடர்ந்து எங்களுக்கு தகவல் கிடைக்கின்றது. முஸ்லிம் விவகாரம் தொடர்பில் அமைச்சர் உரிய முறையில் ஆராய்ந்து பார்ப்பதில்லை.

சுருக்கமாக கூறினால் வீட்டில் இருக்கும் கணவர் தன்னுடைய கணவரா என சோதனையிடுவது போன்று உள்ளது.

இந்த விசாரணைகளில் சுயாதீன தன்மை ஒன்று அவசியம். அப்போது பிரச்சினை தீர்ந்துவிடும்.

முஸ்லிம் விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் செய்ய வேண்டிய விடயங்களை இராணுவம் மற்றும் பொலிஸார் செய்து கொண்டிருக்கின்றனர்.

உடனடியாக அமைச்சர் மாற்றப்பட வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

பொதுத்தேர்தல் உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல்

wpengine

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

wpengine

மின்கட்டணம்கால அவகாசம்! மார்ச் மாதம் 31

wpengine