பிரதான செய்திகள்

முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையிலான கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான் கூறினார்.

அத்துடன் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளும் நோக்கில் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள கடும்போக்குவாத கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய காட்டமான கருத்துகளை தெரிவித்தனர். அத்துடன், இதன் பின்னணியில் செயற்படும் இனவாத சக்திகள் தொடர்பாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

அரிசி இறக்குமதி! தட்டுப்பாடு ஏற்பட இடமில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

தாஜூடினின் படுகொலை! அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

wpengine