பிரதான செய்திகள்

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை

இலங்கையில் முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் சுமார் 2,000 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கும் போது நன்கு ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் இ மில்லது இப்ராஹீம் பி செய்லானி அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் அமெரிக்காவால் உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது

wpengine

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்றும் தமிழ் இனவாதிகள்

wpengine

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பணம் உழைக்கும்! மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரிச்சங்கம்! பலர் கண்டனம்

wpengine