Breaking
Thu. Sep 19th, 2024

பிரான்சின் மார்சேயில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் முஸ்லிம் மதகுருவான எல் ஹாடி டவுடி மீது தீவிரவாதத்தை தூண்டியவர் என்று குற்றம் சுமத்தி அவரை வெளியேற்ற பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரான்சின் முக்கிய அடிப்படை இஸ்லாமிய ஆதரவாளரான எல் ஹாடி டவுடி சாதாரண போதகர் மட்டும் இல்லை என்று சொல்லும் பிரெஞ்சு அரசாங்கம் 37 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் யூதர்கள், பெண்கள் மற்றும் நவீன உலகத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்றும் கூறுகிறது
மேலும், இஸ்லாமிய தீவிரவாதத்தை நோக்கிய தங்கள் நிலைப்பாட்டை மேலும் கடினப்படுத்தும் வகையில் எமானுவல் மக்ரோன் அரசாங்கம் இந்த மதபோதகரை வெளியேற்றம் செய்ய ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அவசர நிலையின் ஒரு பகுதியாக இருந்த 2015 நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 130 பேர் பலியான பின்பு இந்த தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சில சட்டங்களைப் பதிவு செய்ததன் மூலம் இஸ்லாமியக் குற்றவாளிகளைத் தேடல்கள் மற்றும் கைப்பற்றல்கள், வீட்டுக் கைதுகள், மசூதிகள் மூடப்பட்ட நிகழ்வுகள் போன்றவை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அல்ஜீரியாவில் பிறந்த 63 வயதான இமாம் டவுடி ஒரு பிரெஞ்சு குடிமகன் அல்ல எனும் மேட்ரான் நிர்வாகத்தின் கூற்று பொதுவாக முஸ்லீம் மதகுருமார்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தவும், அவர்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

கடந்த காலத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான செயல்களில் பிரான்சின் ஈடுபாடு குறைவாகத்தான் இருந்தது 2012 முதல் 2015 அதன் செயல்பாடுகளில் 40 மதகுருமார்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 28 மாதங்களில் 52 ஆக இவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பிரெஞ்சு அரசாங்கம் தீவிரவாத பிரசங்கத்திற்கு மிகக் குறைந்த சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கடந்த வாரம் தெற்கு பிரான்சில் ஒரு பல்பொருள் அங்காடியில் பயங்கரவாதத் தாக்குதலில் பிணைக்கைதியாக மாற்றி இறந்த பொலிஸ் அதிகாரியான லெப்டினென்ட் கேல்னை கௌரவிக்கும் ஒரு உரையில் பேசிய திரு மேக்ரான் இஸ்லாமிய அரசு பற்றிக் கூறுகையில், இந்த எதிர்ப்பு பயங்கரவாததிற்கானது மட்டும் அல்ல டாஷ் படைகள் மற்றும் வெறுப்பு மற்றும் மரணத்தை தூண்டும் மதகுருமார்களின் போக்கிற்கும் தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பொலிவார்ட் நேஷனல் பகுதியில் இமாம் டவுடி பிரசங்கித்த Sounna மசூதி, டிசம்பர் மாதம் அதிகாரிகளால் மூடப்பட்டது.

தனது பிரசங்கத்தை அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது தனக்கு தெரியும் என்று கூறும் டவுடி அதில் மறைக்க எதுவுமில்லை என்றும் மக்கள் மற்றும் அதிகாரிகளுடனான தனது உறவு எப்போதும் தெளிவானதாகவும் சரியானதாகவும் இருந்து வந்திருகிறது என்கிறார்.

“திடீரென அவர்கள் சலாஃபிஸம் பிரான்சிற்கு ஆபத்து என்று கூறுகிறார்கள்,” என்றும் கூறிய அவர்
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்செல்லில் ஐந்தில் ஒரு பகுதியாக வாழும் சலாபிச இஸ்லாமியர்கள் தீவிரவாதத்திற்கு துணை போகவில்லை என்றும் பிரான்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள நைஸ் போன்ற மற்ற நகரங்கள் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை சிரியாவில் போராட விட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் அரசாங்கத்தின் பயங்கரவாதக் கண்காணிப்புக் குழுவில் கண்காணிக்கப்படும் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள் என்று கூறும் அவர் முகமூடி அணிந்து தலை முதல் கால் வரை மூடபட்டுள்ளவர்களை நோக்கிப் பாயும் குற்றசாட்டுகள் பிரான்சின் சட்டங்களுக்கு விரோதமானது என்றும் குறிப்பிடுகிறார்.

டவுடி குழுவை சேர்ந்த ஐவர் சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜிகாத் போராளிகள் என்று குறிப்பிடும் அதிகாரிகள் டவுடி இவ்விஷயத்தை மறுப்பதாகக் கூறுகின்றனர்.

அவரது சொற்பொழிவுகள் “குடியரசுகளின் மதிப்புகளுக்கு முற்றிலும் முரணானவை” என்று மார்சேய் இன் பொலிஸ் அதிகாரி Olivier de Mazières அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அவர் வெறுப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றைப் பிரசங்கிப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இருந்தாலும் அறிஞர்கள் பலர் ஜிஹாதும் சலபிசாமும் ஒன்றல்ல என்றும் ஆதரங்களுடன் கூறி வருகின்றனர்.

இமாம் டவுடி ஒரு அரசாங்க எழுத்தாளர் என்றே அறியப்பட்டார் என்று கூறுபவர்களில் ஒருவரான இஸ்லாமிய வல்லுநர் திரு. கெய்செர்.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் நல்ல உறவு வைத்திருப்பதற்காக அவர் நன்கு அறியப்பட்டவர்,”என்றும் கூறுகிறார்.

அரசாங்கத்தின் இந்த முடிவு பிரான்சிற்கு அபாயகரமானதாக இருக்கலாம்” என்று ஃபேஸல் மான்சரி கூறினார். “மிகக் குறைந்த மக்கள்தான்தான் உண்மையான இஸ்லாமை அறிவார்கள், தங்களது கற்றறிந்த பேராசிரியரை நாடுகடத்தினால் இம்மக்கள் உண்மையிலேயே நிராயுதபாணியாகிவிடுவார்கள் என்று முடிக்கிறார் டவுடியின் ஆதரவாளரான மான்சரி.
நாட்டையே பரபரப்பாக்கிய இதற்கான தீர்ப்பை எதிர்பார்த்து இரு தரப்பு மக்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *